Showing posts with label நெஞ்சுக்குள் பெய்திடும் வான் மழை. Show all posts
Showing posts with label நெஞ்சுக்குள் பெய்திடும் வான் மழை. Show all posts

Feb 4, 2010

சில சம்பவங்கள் + தொடர் விளைவுகள் = நம்பிக்கைகள்.



பல பதிவுகள், வாதப்பிரதிவாதங்கள், கருத்தாடல்கள், ஆய்வுகள், கட்டுரைகள் க்ணக்கிலடங்காதவை, வாசித்தாகி விட்டது. ஆனால் எதுவுமே என்னை திருப்தி செய்ததாக இல்லை. எல்லாமே ஒரு பக்க சர்பன விவதங்கள் தான், யருமே நடுனிலையில் எழுதவில்லை போலும், அத்னால் தானிங்கே என் தேடல்களும் இன்னும் தொடர்கின்றன போலும்....
தேடினேன் தேடினேன் எனக்குகிடைத்த சந்தர்ப்பங்களனைத்தினதும் எல்லை வரை சென்று தேடினேன். கேள்விக்குறிகள் (?) தொடர்ந்தனவெயன்றி ஒரு முற்றுப்புள்ளிதனும் (.) கிடைக்கவில்லை. ஆனாலும் "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதா விக்கிரமாதித்தன் போல் நானும் வேதாளத்தை இல்லை இல்லை தேடலை தொடர்ந்ததால்...... இன்று பதிவாக உங்கள் பார்வைக்கு...


மூடனம்பிக்கை மூடனம்பிக்கை அப்படிங்கிறங்களே அப்படியின்னா என்னாது?.
முன்னோரின் நம்பிக்கைகள் தான் மூடநம்பிக்கையா? இல்லை, ஆதிமுதல் வலுவாக இருந்து த்ற்போது வலுவிழந்த நம்பிக்கைகள் தான் மூடநம்பிக்கையா? இல்லை மதங்களோடு இரண்டற கலந்துவிட்ட நம்பிக்கைகள் தான் மூடனம்பிக்கைகளாயினவோ? இல்லை, தொடர்பற்ற சம்பவங்களினல் கிடைக்கப்பெற்ற பொரும்பான்மையான முடிவுகளின் மீதான நம்பிக்கைகள் தான் மூடநம்பிக்கையானதுவோ?
 
உ+ம்: 
சம்பவம் 1)- காகம் கரைதல்.
சம்பவம் 2)- விருந்தினர் வருகை.
அவதானம் :- அதே தொடர் சம்பவங்கள் மாறாத பெரும்பான்மையான முடிவுகள்.
முடிவு :- விளைவுகள் மீதான நம்பிக்கை பரப்புரை செய்யப்பட்டு தொடராக கடத்தப்பட்டு நம்பபடுகிறது.
இவ்வாறான தொடர்பற்ற சம்பவங்களின் தொடரான விளைவுகள் மீதான நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளாகலாம் தானே***!!!?*?

மூடநம்பிக்கைகள் ஆதியில் தான் தோன்றியவையா?, இல்லை இன்றும் தோன்றியவண்ணம் உள்ளனவா? வலுவற்ற காரணிகள், அதன் தொடரான விளைவுகள் இணைவதா கடினம்...???,

மூத்தோரின் நம்பிக்கைகள் வலுவற்ற ஆதாரங்கள்/சம்பவங்கள்/ அவை மூடநம்பிக்கைகள். ஆரம்பம் முதல் இன்றுவரை விமர்சனமுடாக மாற்றங்கள் இன்றி நம்பபட்டுக்கொண்டிருக்கும். ஆதி முதல் அவை மூடநம்பிக்கைகள் தான். நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் இரண்டும் வெவ்வேறு நம்பிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கை எனலாமா? ***??? 
 
மூடநம்பிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்த ௯டியவை, அவை பரிசோதனைக்கு மூலங்களையும் சந்தர்ப்பங்களையும் இலகுவாக தர௯டியவை அல்லவா???** ஆனால் முடிவுகள் இன்னுமோரு மூடநம்பிக்கையாகத்தானே இருக்கும்??????
 
நம்பிக்கைகள் ஆய்வுக்குட்படும் ஆனால் பொரும்பாலானவற்றுக்கு ஆய்வுக்குறிய மூலங்களை இன்றைய மனிதனின் அறிவால் பெற்றுக்கொள்ள முடியதிருப்பது நிஐம் தான்!!!  தோல்விகளை திசை திருப்பி விடுவது மனித இயல்பு தானே!?? அதனால்  எம்மால் நிருபிக்கப்பட முடியாத பல நம்பிக்கைகளை மூடநம்பிக்கையாக திசை திருப்பி விடுகிறோமோ???? புரியவில்லை எனக்கு..!! [இது தான் இன்று எமது வெற்றி??!!] 

ஆய்வுக்குகிடைக்காத அந்த மூலங்களை தேடி எடுத்து அதன் முடிவை தீர்மானிப்பது சிறப்பான வெற்றியல்லவா??? ஆனால் ஆய்வே செய்யாது நாம் எடுக்கின்ற சில தீர்மான்ங்களே மூடநம்பிக்கையாகலாம் தானே!!!*?? 

ஊர் பெரியவர் ஒருவர் ["அட கடைச்சரக்குக்குத்தான்  ஆடம்பர ஆர்ப்பாட்ட விள்ம்பரங்களும் தம் இருப்பை நிலை நாட்ட தரசான்றுகளும் தேவையடா! சீக்கிரம் அவை அதனை பெற்றிடும் நிஐம் விளம்பரங்கள் செய்யாது அமைதியாக இருக்கும்"] - அப்படி என்கிறார்.

ஆஹா என் தேடல் புது பரிமாணம் கொள்கிறது போலும்..... தொடரட்டும் நல்லபடி.......

[வானம் பாடியின் தேடலுக்கு வலுசேர்க்க ௯ட்டருகே வந்து தோட்டத்தை
வாசம் வீசிட செய்திடுங்கள்]