Showing posts with label சோலைக்குயில்கள். Show all posts
Showing posts with label சோலைக்குயில்கள். Show all posts

Sep 18, 2010

காற்றிலே பேசுகிறேன், கேட்கிறதா? - I

ON THE MEMO OF  MY ELDER SISTER


கனவு போல் இருக்கிறது - நேற்று
நடந்தது நம்பமுடியவில்லை.
ஆனால் நிஐம் அது தானே, ம்...
காலத்தின் கோலம் !

அக்கா
நீ எங்கே? அங்கே நீ
நலமா? ஓரேயொரு முறை
வீடு வாவேன், இத்தனை நாளா
கோபமா? எத்தனை முறைதான்
அழைத்துவிட்டேன் கேட்கவில்லையா?

அக்கா
உன்னோடு செல்ல சண்டைகளிட்டு
நாளாச்சு இல்லையா? நான் தொலைவில்
வந்தபோதும் தினமும் விசாரிப்பாய் - மறக்காமல்
சண்டையிட்டு செல்லமாய் கண்டிப்பாய், தனிமையில்
தோல்விகளால் துவண்டபோதெல்லாம் தாய் மடியாய்
வந்தவளே... நீயும் எனக்கொரு தாயம்மா - உன்
சேயின்குரல் இன்னுமா கேட்கவில்லையுனக்கு?

அக்கா
உன்னொடு பேச ஒன்றல்ல
ஓர் ஆயிரம் உண்டம்மா நெஞ்சோடு! நேரில் கூட வேணா,
காற்றில் இல்லை கனவிலாவது வந்து போகமாட்டாயா?
ஒரேயோரு முறை அத்தனையும் கொட்டிட்டு நிம்மதியாய்
ஒரு தூக்கம் உன் மடிமீது போதுமெனக்கு! சின்னதாய்
கலங்கினாலே ஓடி வந்திடுவாய்..... இன்று கூவியழைத்து
நான் களைத்தே போனேன் இன்னுமா உனக்கு
வரத்தோணல.....



[பேச இன்னும் இருக்கு...]