தவறியது நானல்ல, நீ- அது
உனக்கு தெளிவாகத் தெரியும்,
நீ இன்னும் நிலை கொள்ளவேயில்லையே..!!
விட்டதா உன் வறட்டுக் கௌரவம் - நீ
போலி நீயே அறிந்தபின்னும் ,உன்
தோல்வியை இன்னும் மறுக்கிறாயா ?
இல்லை, மறைக்கிறாயா....?
தன்னம்பிக்கை குறைந்தவரே ,
உம் தோல்வியை மறைக்க- என்னை
அழிப்பதால் மட்டும் முடியுமா.....?
ஆனால்,
எல்லாம் அறிந்தும் அறியாமல் - நீர்
சற்றேனும் புரிந்திடுக.....!!
நீர்,
நினைக்கும் போது தளிர்க்கவும்
மீண்டும் கருகவும் - நான்
ஒன்றும் உம்
வீட்டு செடியுமல்ல, கொடியுமல்ல.....!!
நான்
ஆல் போன்றவனல்ல, உண்மைதான் -
புரிந்து கொள்ளும் ,
அறுகு போன்றவன்...!!
உம் நிகழ்காலம் - அது
உமது இறந்தகாலத்தின் மீது நீர்,
போட்ட சோடனைகள் - யாக்கிரதை
வேடமிட்ட முலாம் கலையாது பாத்துவிடும்.....
ஆனால், என்
நிகழ்காலம் நேற்று என்
இறந்தகாலம், நாளை அதுவே - என்
எதிர்காலமும் கூட....!!!!
நான் கருவிலே,
உருக்கொண்டபோது உடன் வந்தது என் உள்ளம், - உமக்கு
மேடை தோறும் மாறும் நாடக வேடமது....!!!
உந்தன் நிழல் கூட
எனக்கு பரிச்சயமானதில்லை, -என்
எண்ண அலைகளும் கூட உம்மை நாடி வரா,
கனவுகளில் வாழ முயலாதே........
உன் பாதையில்,
உன் வழியை தேடிக்கொள்,
என் பாதையில் தேடுகிறாய்
பலனேதுவுமில்லை..!
சிறு சிட்டிவன், இன்று
சிகரமில்லை சிறு குன்று தான்....,
இன்றே நீ வெந்துபோகிறாய்.....
நாளைய விடியலின் போது.....??
நாளைக்கும் நீ வேண்டும்,
ஆனால்
உனக்கு உன் எதிர்காலம் எப்போதுமே????????
நானாக இருக்க
என்னால் மட்டுமே முடியும்!
வீணாக உன் த்னித்துவத்தை இழக்காதே...!!
இன்று மட்டுமல்ல, இறுதி வரை யாசிக்காதே
என் நட்பை, கனவில் ௯ட....
இறுதியாக ஒன்று - உன்னை
நான் மன்னித்துமல்ல மறந்தே விட்டேன்....
முடிந்தால் நீ, நீயாக இருக்க முயற்சி செய்......
உனக்குள்ளும் வாழ்க்கை இருக்கு.!
Superb!
ReplyDeleteWho hurt this little nightingale?
Don't worry...
You know that you are right. So don't try to explain you at him/her. He/ She will definitely feel your pure love.
Superb!
ReplyDeleteWho hurt this little nightingale?
You know that you are right, So don't try to explain you at him/her. One day he/she will realize you and your pure love. So Don't worry bird. You fly.
உன் கவிதையை நான் வாசிக்கவில்லை.
ReplyDeleteஏனெனில் எனக்கு நீச்சல் தெரியாது.
உன் கவிதையில் மூழ்கி நான் இறக்க விரும்பவில்லை
ஆகவே உன் கவிதை கரை ஒதுங்கும்வரை காத்திருப்பேன்
என்றும் உன் அன்புடன்
.................................
புறா கூட்டில பாட்னசிப் வேற
ReplyDelete