Showing posts with label நந்தவனப்பூக்கள்... Show all posts
Showing posts with label நந்தவனப்பூக்கள்... Show all posts

Mar 22, 2010

நினைவுகளில் ஓராண்டு.......



கால சுனாமியில்
சாமியிடம் போய்விட்டாய் நீ......
முகவரி தெரியாது உன்னை தேடியலைகின்றோம், எங்கே போனாய் நீ...?
நீ யாரையும் வெறுத்ததில்லை, இங்கு
உன்னை வெறுத்தவரும் யாருமில்லை
இருந்தும் உன்னை ஏன் நீ வெறுத்தாய்.?
எங்கள் சோலையில் நீ
கீதம் பாடும் வானம்பாடி, கானம் பாடாது மறந்து போனதேனோ?
எம் விழிகளின் அருவியோடு விடை பெற்றவளே,நீ
சென்ற பாதைதனை உறவுகள் நாம் தேடுகிறோம் ஆனால்
வழிதான் தெரியவில்லை ........

எமக்கெல்லாம் சிறகடிக்க கற்றுத்தந்தவள் நீ,
உன் சிறகுகளை மட்டும் சுட்டுக்கொண்டதேனோ?

கனவுகள் 1000
கண்களில் மின்னிட எங்கள்
நந்தவனத்தில் பூத்திருந்தாய் நீ
கண்முன்னே கருகி சருகானாய்.................................
கனவில் கூட நினைத்ததில்லை!
அப்பாவி போல் ஏங்கும் சின்னமனம்,
மீண்டும் நீ துளிர்த்திட!!!
வாழ்க்கை ஒரு வழிப்பாதை தனையுமறந்து....???
கனவுகளெல்லாம் நேற்றோடு கானல் நீராயிற்று,
நினைவுகள் மட்டுமே எம்மோடு.....

பாதியிலே வந்த சொந்தமிவன் ஆனாலும்
உன் பாசமும் நேசமும் வேஷமற்றவை!
பாசமலரே என் நந்தவனத்தின் வாடா ரோஜாக்காளில் நீயும் ஒன்று!

மறுபிறவியிருப்பின் மீண்டும் நீ எங்கள் நந்தவனத்தில் பூத்திடவேண்டும்....

 

அன்புடன் 
தம்பி