Feb 2, 2010
இது என் கானம்...!
இது வானம்பாடியின் முதல் கானம், வலைப்பூக்களில் வாசம் வீசும் மலர்களிடையே ஒரு கீதம்பாடியாய் எனது வானம்பாடியும்.கீதமிசைத்திட வருகிறது. இது என் ஒரு வருட தவமிது, சின்ன மனதின் செல்லக்கனவுகளில் ஒன்று, இன்று தான் இறக்கை கட்டிக்கொள்கிறது. இனி என்ன சிட்டுக்கு சிறகு முளைத்துவிட்டது, தவறாமல் பறக்கும்.
சிறகடிக்கின்ற இந்த வானம்பாடியின் கீதங்களில் என் சின்ன சின்ன ஆசைகளும்,கண்ணோடு வருகின்ற கனவுகளுடன் கூடவே சிறகடித்து பறக்கின்றபோது அந்த வெண்பஞ்சு மேககூட்டங்கள் காதோடு கிசுகிசுத்துவிட்ட செய்திகள்,என் சின்னவுடல் தழுவிச்செல்லும் வீசும் காற்று என்கூட பகிர்ந்து கொள்கின்ற வேடதாரி உலகத்தாரின் வேஷங்கள் மொத்தத்தில் நிஐத்தின் நிழலை கண்டு வந்து சொல்லும்!!.
சிறகடிக்கும் இந்த வானம்பாடிக்கும் பதிவுலக சரணாலயத்தில் ஓர் சிறு கூடு கிடைத்திடுமா??
சிட்டுக்கு சிறகடிக்க என்ன கட்டுப்பாடு.....
அதை வெட்டிப்போடு ....!!!
Labels:
என் ௯ட்டில்
Subscribe to:
Post Comments (Atom)
முதல் கானமே சூப்பர் ஹிட்டாக வாழ்த்துக்கள்! வலையுலகத்திற்கு வர யார் பர்மிசனும் அவசியமில்லை. வந்துட்டீங்கல்லே, இனிமே கலக்குங்க...
ReplyDeleteகானம் பாடும் இந்த சோலைக்குயில் வானம்பாடியின் ௯ட்டருகே வந்து சென்றமைக்கு நன்றிகள்.
ReplyDeleteபாஸ், ஏற்கனவே எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு அபிமன்யு எழுதிட்ருக்கார்.
ReplyDeletehttp://alagurajas.blogspot.com/
பெயர்க்குழப்பம் வந்துராதா பாஸ்? யோசிங்க..!
அடடா பெயர் போயிருச்செ...... ம்...ம் புதுசா பாப்பம்.
ReplyDeleteThanks RVC 4 The Remider