Jan 28, 2012

டுவீற்றர் வானில் - I

எனக்கு தெரிந்தவரை டுவீற்றரில் கீச்சிடும் பறவைகளில் பலர் தமக்கான  வலைப்பூவை கொண்டுள்ளார்கள். அங்கு தமது டுவீற்றுகளை பதிவிட்டு செல்வதுண்டு... என் எண்ணங்களை வானம்பாடியில் கானம்பாடிட நேரம் கிடைப்பதே அரிது.. ஆன போதும் தொடரான கீதம் ஒன்று வானம்பாடியில் இசைத்திட ஏங்கியது மனம்..

அதற்காக,கற்பனைக்குதிரையின் கடிவாளத்தை தட்டியது... சீ அது நீங்கள்.. இது வானம் பாடியல்லவா? ஆகையால் வானம்பாடியும் சிறகைவிரித்தது கறபனை வானில் சஞ்சாரம் செய்தது....  சில கண்டங்கள் தாண்டி பறந்த போது சிட்டுக்கு சிக்குப்பட்டது, டுவீட்டர் வானில் கீச்சிடும் பக்கத்து பறவைகளின் கீச்சொலிகள்...  அதில் வானம்படிக்கு பிடித்தவை....

இந்த வானம்பாடியை சிறைப்பிடித்த உங்கள் கீச்சுகளை இங்கு கானம்பாட டுவீற்றர் பறவைகளே உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.. 
Nmangai sandhyacharu 18 Dec விரும்பிய உறவுகளையும் விருப்பமின்றி பிரிந்தே வாழ வேண்டியுள்ளது...
 
soniaarun சோனியா 16 Dec ஒருவர் அதிகம் குற்றம் செய்வது தன்னுடைய பெற்றோருக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும்
 
iamkarki கார்க்கி 15 Dec வாழ்க்கை ஒண்ணும் பரீட்சை இல்லை, அடிஷ்னல் பேப்பர் கேட்க. இருக்கிற ஒரு பேப்பர் தான். :)))
 
powderdappa vicky 15 Dec உன்னிடம் பாசம் வைக்கும் இதயத்தை நேசி உன்னிடம் கோபப்படும் இதயத்தை அதிகமாய் நேசி
 
JanuShath ஜனனிஇராசநாயகம் 3 Dec இங்கு எங்கோ தான் ஒளிந்துகொண்டிருக்கிறது எனக்கான வாழ்க்கை :)
 
RealBeenu sbnu 1 Dec எனக்கு பெயர் வைத்தது என் பெற்றோர்தான் ஆனால் அவர்களுக்கு அம்மா-அப்பா என்ற புதுப்பெயர் வைத்து முதலில் அழைத்தது நான்!!
MirzaSania Sania Mirza-Malik 10 Feb A little fear behind every 'Leave me alone !' A littl hope behind every 'Gudbye !'
 
MirzaSania Sania Mirza-Malik 10 Feb A little uneasiness behind every 'am okay !' A little pain behind every 'forget it !'
 
MirzaSania Sania Mirza-Malik 10 Feb A little emotion behind every 'I dont care !' A little love behind every 'I hate u !'
 
MirzaSania Sania Mirza-Malik 10 Feb There's always a little truth behind every 'Just Kidding !' A little knowledge behind every 'I dont know !'
 
tamiljokes Tamil Jokes 10 Jul 09 நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?



NT: டுவீட்டர் வானில் வானம்பாடியை சிறைப்பிடித்த கீச்சுகள் தொடரும்... மாற்றங்களுடன்...